முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக, 1.27 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக, அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி 2022 இல் 4 சுற்றுப்பயணங்கள், 2023 இல் 14 சுற்றுப்பயணங்கள் மற்றும் 2024 இல் 5 சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த சுற்றுப்பயணங்களால் நாடு பெற்ற நன்மைகள் அடங்கிய ஆவணத்தை அமைச்சர் தாக்கல் செய்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்