வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் பயணப்பையில் மறைத்துஇ கொண்டுவரப்பட்ட 55 இலட்சம் ரூபாய் பெறுமதியான 36,800 சிகரெட்டுக்களை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.