நாடளாவிய ரீதியாக நிலவும் வெப்பமான காலநிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, கிழக்கு மாகாணத்தின் பல இடங்களில் மழையுடனான வானிலை பதிவாகக் கூடும்.
மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடைக்கிடையே மழையுடனான வானிலை பதிவாகக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.