-யாழ் நிருபர்-
நீர்வேலி மாசிவன் சந்தியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மாசிவன்சந்தியால் மோட்டார் சைக்கிளில் இளைஞர் செல்லும் போது குறுக்கே வந்த ஹயஸ்ரக வான் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.