வவுனியா மன்னார் வீதியில் பாதசாரி கடவையில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு ஏற்பட்ட விபத்தில் மின்சார சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா மன்னார் வீதி கலைமகள் மைதானத்தருகில் வசித்து வந்த மின்சார சபையில் பணி புரியும் மூன்று பிள்ளைகளின் தந்தையான நெளபர் (வயது – 48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவில் மின்சார சபையில் பணி புரியும் ஊழியர் தனது பணி நிமித்தம் முல்லைத்தீவு செல்வதற்காக பேருந்து நிலையம் நோக்கி பாதசாரி கடவை பகுதியில் வீதி ஓரமாக நடந்து சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த ஹயஸ் ரக வாகனம் மோதியதில் படுகாயமடைந்து வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
குறித்த வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்