வீதியிலிருந்து கிடைத்த கைபேசிகளை சொந்தமாக்க நினைத்த பொலிஸ் அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
பேலியகொட பொலிஸ்நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரையே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்ய பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 13ஆம் திகதி இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் வீதியிலிருந்து கையடக்கத் தொலைபேசிகள் அடங்கிய பொதியொன்று கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்பிறகு, குறித்த உப பொலிஸ் பரிசோதகர் அந்த பொதியை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்காமல் தம்வசம் வைத்துக்கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதன்படி, குறித்த பொலிஸ் அதிகாரி பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.