-யாழ் நிருபர்-
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்வேலி பகுதியில் இன்றையதினம் சனிக்கிழமை வீடு எரிந்து பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துரை வீதி, நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச் சேர்ந்த பரயோகஜெயம் (வயது – 71) சரஸ்வதி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
எரிவாயு கசிவினால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக அறிய முடிகிறது.
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் லெனின் குமார் அவர்கள் குறித்த பகுதிக்கு விஜயம் செய்து சடலத்தை பார்வையிட்ட பின் உடற்கூற்று பரிசோதனைகளுக்கு உத்தரவிட்டார்.
தடயவியல் பொலிஸார் தடயங்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், பொலிஸார் கோப்பாய் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.