அம்பலாங்கொடை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பலநாள் மீன்பிடி படகொன்றில் விஷ வாயு கசிந்ததில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பலநாள் மீன்பிடி படகிலுள்ள மீன்களை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியிலிருந்து கசிந்த விஷ வாயுவை சுவாசித்தமையினாலேயே இவர் உயிரிழந்துள்ளதுடன் 7 மீனவர்கள் பலபிட்டி ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.