சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 3,200 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று திங்கட்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து நாட்டுக்கு வருகை தந்த சந்தேக நபர் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்தின் விமான நிலையப் பிரிவின் அதிகாரிகள் குழு நடத்திய சோதனை நடவடிக்கையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கலேவெல பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவராவார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.