சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவரது பிணை கோரிக்கை மனு கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்களை கொண்டு, கடவுச்சீட்டை தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த வழக்கில் அவருக்கு 2 வருட சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, சஷி வீரவன்ச மேன்முறையீடு செய்திருந்தார்.
குறித்த மேன்முறையீடு மனு தொடர்பான பரிசீலனை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், சஷி வீரவன்சவை பிணையில் விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள் :-