கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு கார் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
இத்தாலியை சேர்ந்த 76 வயதுடைய மனைவி, 78 வயதுடைய கணவன் மற்றும் அநுராதபுரம் பந்துலகமைச் சேர்ந்த 42 வயதான சாரதி ஆகியோரே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.
குறித்த தம்பதியினர் நேற்று இரவு 9 மணியளவில் தமது பயணத்தை முடித்து கொண்டு இத்தாலி செல்வதற்காக காரில் ஹிக்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா ஹோட்டலில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர்.
இதன் போதே குறித்த கார் அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.