-மட்டக்களப்பு நிருபர்-
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் லியோ கழகத்தின் புதிய அங்கத்துவ மாணவிகளைச் சேர்க்கும் அங்குரார்ப்பண நிகழ்வு பாடசாலை குறோப்ட் மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வு கடந்த வருட (2022/2023) தலைவி செல்வி லியோ திசாரி சுரேஸ் றொபேட்டின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் போது இக்கழகத்தின் இவ் ஆண்டுக்கான புதிய தலைவராக செல்வி லியோ சேஷாங்கி சுரேஸ் பதவியேற்றார்.
இந்நிகழ்வைச் சிறப்பிக்கும் முகமாக சிரேஸ்ட லயன்ஸ் கழக உறுப்பினர்கள், லியோ கழக உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பிரதி அதிபர்கள் மற்றும் லியோ கழக ஆலோசகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.