நுவரெலியாவில் கூட்டுறவு தங்குமிட விடுதியிலிருந்து இன்றைய தினம் திங்கட்கிழமை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பனாபிட்டிய கரந்தெனிய பகுதியை சேர்ந்த 31 வயதுடையவரே இதன் போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த நபர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் தங்குமிடத்திற்கு வந்தாகவும் அந்த இடத்தை விட்டு இன்று திங்கட்கிழமை காலை வெளியேறுவதாக விடுதி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளார்.
எனினும் இன்று திங்கட்கிழமை காலை வரை அவர் வெளியே வராத காரணத்தால் சந்தேகம் ஏற்பட்டு ஊழியர் ஒருவர் அறையில் ஜன்னல் பகுதியில் இருந்து பார்த்த போது, குறித்த நபர் தரையில் விழுந்து கிடப்பதைப் பார்த்து இது குறித்து நுவரெலியா பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் குறித்த நபர் தங்கியிருந்த அறையின் கதவு உற்பகுதியில் பூட்டப்பட்டு இருந்தமையால் கதவினை உடைத்துக்கொண்டு உள்நுளைந்த போது கீழே விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து 1990 நோயாளர் காவு வண்டி சேவைக்கு அழைப்பு விடுத்துள்ளனர் ஸ்தலத்துக்கு விரைந்தவர்கள் பரிசோதனை செய்து குறித்த நபர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தினர்.
தொடர்ந்து பொலிஸார் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்