நுவரெலியாவின் கிரகரி வாவியில் இன்று சனிக்கிழமை காலை சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பகுதியை சேர்ந்த இராமன் பத்மநாதன் (வயது – 64) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா-பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இது தற்கொலையா? அல்லது கொலையா என்ற கோணத்தில் விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
