லஞ்சீட் பாவனைகளை அகற்றி அவற்றிற்கு பதிலாக வாழை இலை பாவனைகளை ஊக்குவிக்கும் ஏர்ன் சிலோன்-Earn Ceylon நிறுவனத்தின் முன்னோடி திட்டத்தின் கீழ் 29,064 வாழை இலைதட்டுகள் உணவகங்களுக்கு விநியோகிக்கப்பட்டு 56 நாட்களில் 29,064 லஞ்சீட் பாவனைகள் குறைப்பு தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவு படுத்தும் கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மே மாதம் 2025 இல் நாட்டில் lunch sheet பாவனை முற்றாக தடை செய்யப்பட உள்ள நிலையில் மட்டக்களப்பு மாநகர சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஆதரவு மற்றும் சமூக உணவாளர்களுடன் இணைந்து மட்டக்களப்பினை மையமாகக்கொண்டு சமூகஉணர்வு செயற்பாடுகளை ஒருபகுதியாக முன்னெடுத்துவரும் ஏர்ன் சிலோன்-Earn Ceylon நிறுவனம் காலநிலையில் எதிர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனைகளை முற்றாக மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்து அகற்றுவதற்குண்டான செயற்பாடுகளை முதன் முதலாக மாவட்டத்தில் முன்னெடுப்பது தொடர்பாக ஊடகவியலாளர்களுடனான ஆரம்ப கலந்துரையாடல் இடம்பெற்றது.
இத்திட்டத்திலுள்ள சாதக பாதகங்கள் சவால்களை மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த சகல உணவக உரிமையாளர்களும் பங்களிப்பினையும் ஆதரவினை பெற்றுக்கொள்ள நடவடிக்கையாகவும் நகர் பகுதிகளிலுள்ள கால்நடைகளுக்கு பாதிப்பில்லாத உணவு கிடைக்கும் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிடையே வாழை விவசாயத்தினை ஊக்கப்படுத்துவதனூடாக அவர்களுக்கு நிலையான மற்றும் நிரந்தரமான வாழ்வாதாரம் மற்றும் தொழில் செயற்பாடுகளை ஏற்படுத்திக்கொடுக்க முடியும் என இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இவ்வாறான சூழல் நட்பு உணவக செயற்பாடுகளின் நிலைத்தன்மையினை உறுதிப்படுத்த மற்றும் மேம்படுத்த உணவக உரிமையாளர்கள் மாநகர சபை மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஆதரவும் சமூக ஆர்வலர்களின் ஆலோசனைகளும் அவசியமானதென என இவ் ஆரோக்கியமான செயற்பாடுகளை செயற்படுத்தும் அத்துடன் இத்திட்டத்தில் இணைந்து பங்காற்றிய ஊடகவியலாளரகளை கௌரவிக்கும் வகையில் ஊடகவியலாளரகளுக்கான ஜெகெட் மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
ஏர்ன் சிலோன்- நிறுவனத்தின பணிப்பாளர் குணசீலன் சதீஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏர்ன் சிலோன் நிறுவன ஆலோசகர் வி.குகதாசன் ஏர்ன் சிலோன்- பணிப்பாளர் சபை உறுப்பினர் டி.மயூரன் மற்றும் ஏர்ன் சிலோன்-ஊளியர்கள் ஊடகவியலாளரகள்
கலந்து கொண்டனர்.








Beta feature
