பொலன்னறுவை – மட்டக்களப்பு மாவட்ட எல்லைப்பகுதியில் அமைந்துள்ள வெலிகந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முத்துக்கல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட குடும்பஸ்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனை பகுதியைச் சேர்ந்த றிஸ்வான் (வயது – 37) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
உயிரிழந்த நபர், மனைவி மற்றும் உறவினர் ஒருவர் ஆகியோர் கரப்பொல – முத்துக்கல் பகுதி ஊடாக சேனபுர பகுதிக்கு செல்லும் போது வெள்ளநீரில் அகப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் அவரது மனைவி மற்றும் மற்றைய நபர் மரக்கிளை ஒன்றினைப் பிடித்து உயிர் தப்பியுள்ள போதிலும் உயிரிழந்தவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டு இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரணமடைந்த நபரின் உடல் மருத்துவப் பரிசோதனைக்காக வெலிகந்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்