வாய்க்காலில் இருந்து சடலம் மீட்பு

இரண்டு பிள்ளைகளின் தந்தை நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பரந்தன் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்காலில் இருந்து பொலிஸாரால் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியை சேர்ந்த பெனடிற் பெனிஸ் நிமலன்  (37 வயது) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்