ஏமன் நாட்டு பொறியாளர் ஹஷேம் அல்-கைலி வானத்தில் மிதந்தபடி இருக்கும் உணவகத்தை உருவாக்கியுள்ளார்.
இது ஒரு பெரிய அணுசக்தியால் இயங்கும் ‘பறக்கும் உணவகம்’, இது வானத்தில் பறந்து கொண்டே இருக்கும். இதில் ஒரே நேரத்தில் 5,000 பேர் தங்க முடியும்.
காற்றில் பறக்கும் மேகங்களுக்கு மத்தியில் இருப்பது யாரையும் சிலிர்க்க வைக்கும். உள்ளே இருந்து பார்த்தால் 5 நட்சத்திர உணவகம் போல தோன்றும்.
இதில், வணிக வளாகம், மதுபானசாலை, உணவகம், விளையாட்டு வளாகம், திரை அரங்கம் ஆகியவற்றுடன், குழந்தைகள் விளையாடும் மைதானமும் கட்டப்பட்டுள்ளது.
அதன் உள்ளே ஒரு மாநாட்டு மையமும் உள்ளது. அங்கு எந்த நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்யலாம். இந்த ஸ்கை க்ரூஸ் முற்றிலும் அணுசக்தியால் இயக்கப்படுகிறது.
எளிமையாக புரிந்து கொண்டால், அதில் விமானம் போல் எரிபொருளை நிரப்ப வேண்டிய அவசியமே இருக்காது.
அணு எரிபொருளாக இருப்பதால், அது எப்போதும் காற்றில் பறந்து கொண்டே இருக்கும். அதன் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பும் வானிலேயே செய்யப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்படுகின்றது