-கல்முனை நிருபர்-
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பொது நூலகத்தினால் வாசிப்பு மாதத்தின் முக்கியத்துவம் தொடர்பாக அறிவார்ந்த சமுகத்திற்கான வாசிப்பின் தளம் நூலகம் எனும் தொனிப்பொருளில் இத் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை நூலகர் வினோதா வாசகர்கள் மற்றும் மாணவர்கள், ஊடகவியலாளர்களுக்கு வழங்கி வைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார். மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் கீழ் 12 நூலகங்கள் இயங்கி வருகின்றன. இதில் கோட்டைக்கல்லாறு பொது நூலகமும் ஒன்றாகும். இந் நூலகத்தில் 2800 நூல்கள் உள்ளன. இங்குள்ள நூல்களை எதிர்கால சமுதாயம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அதற்கு மாணவர்கள்,வாசகர்கள், ஆராய்ச்சியாளர்கள் அங்கத்தவர்களாக இணைந்து நூலகம் ஊடாக பயன்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என கோட்டைக்கல்லாறு பொது நூலகம் கேட்டுள்ளது.