வாக்குச் சீட்டு விநியோகம் செய்த களுத்துறை தெற்கு தபால் நிலைய தபால்காரர் மீது தாக்குதல் மேற்கொண்ட நபரை களுத்துறை வடக்கு பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
களுத்துறை ஜாவத்த பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவரே இதன் போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தாபால்காரருக்கு சந்தேகநபருக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றியதையடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தபால்காரர் வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான படிவத்துடன் சென்றுள்ளதுடன், சந்தேகநபரை களுத்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.