ஹபரணை – பொலன்னறுவை பிரதான வீதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவையில் இருந்து பயணித்த ஜீப் வண்டியும் ஹபரணையிலிருந்து பயணித்த காரும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தின் போது ஜீப் வண்டியில் பயணித்த நபரொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.