2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தனிநபர்களுக்கான வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
வாகன இறக்குமதி தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவை தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தேவைகளுக்கான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அடுத்த மாதம் அனுமதி வழங்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்