-வவுனியா நிருபர்-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்தேசிய பொதுக்கட்டமைப்பினரால் நிறுத்தப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் ப.அரியநேந்திரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தேர்தல் பிரச்சார கூட்டம் வவுனியா கலைமகள் சனசமூக நிலைய மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
முன்னதாக குருமன்காடு பகுதியில் இருந்து மங்கள இசை முழங்க பொதுவேட்பாளர் ப.அரியநேந்திரன் மற்றும் ஏனைய அரசியல் பிரமுகர்கள் நிகழ்வு மைதானத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
அங்கு ஈகைசுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கூட்டம் ஆரம்பமாகியது.
முன்னாள்பாராளுமன்றஉறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்,
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், யாழ் மாநகரசபையின் முன்னாள் மேயர் மணிவண்ணன், முன்னாள் மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து, அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், ஜதீந்திரா, யோதிலிங்கம் மற்றும் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.