-பதுளை நிருபர்-
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் பண்டாரவளை ரயில் நிலையத்திற்கும் ஹீல்ஓயரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் தடம்புரண்டமையினால் பதுளை கொழும்புக்கான ரயில் சேவை முற்றாக தடைப்பட்டது.
அத்துடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட அஞ்சல் ரயில் தெமோதரை பகுதியில் தனது பயணத்தை நிறுத்தி கொண்டு, மீண்டும் பதுளைக்கு திரும்பியுள்ளதாக பதுளை புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதன்போது, புகையிர ஊழியர்களின் கடும் முயற்சியின் காரணமாக தடம்புரண்ட புகையிரதம் சரி செய்யப்பட்டு, பதுளைக்கான புகையிரத சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக அதிகாரி மேலும் தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்