-யாழ் நிருபர்-
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டிற்கான பாதீடானது இன்று புதன்கிழமை நிறைவேற்றப்பட்டது.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் பாதீட்டு சபைக்கூட்டம், தவிசாளர் ஜெசீதன் தலைமையில் ஆரம்பமாகியது.
இதன்போது தவிசாளர் பாதீட்டு உரையை முன்வைத்தார், அதனைத் தொடர்ந்து பாதீடு மீதான கருத்துக்களை உறுப்பினர்கள் முன்வைத்தனர்.
28 உறுப்பினர்களை கொண்ட சபையில், 20 உறுப்பினர்கள் பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் 06 உறுப்பினர்கள், பாதீட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.
02 உறுப்பினர்கள் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீடு 14 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.