நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தில் நேற்று புதன் கிழமை காலை இலங்கை போக்குவரத்து சபை பேருந்து மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நானுஓயாவிலிருந்து நுவரெலியா நகரை நோக்கிப் பயணித்த குறித்த பேருந்து, நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தினுள் வீதியைக் கடக்க முற்பட்ட 72 வயதுடைய வயோதிபர் மீது மோதியுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பேருந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பேருந்து நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்