கண்டி பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருதலாவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கிரிக்கெட் மட்டை மற்றும் தடியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
முருதலாவ பிரதேசத்தச் சேர்ந்த 55 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ள நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.