-யாழ் நிருபர்-
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் இன்றையதினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அராலித்துறை பகுதியை சேர்ந்த 47 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அராலித்துறை பகுதியில் நீண்ட நாட்களாக குறித்த நபர் கசிப்பினை விற்பனை செய்து வருவதாக இரகசிய தகவல் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றது.
இந்நிலையில் சுற்றி வளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட போது சந்தேகநபரின் வீட்டிலிருந்து ஏழு லீட்டர் கசிப்பு மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட கசப்புடன் சந்தேகநபர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் பொலிசார் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கொண்டு வருகின்றனர்.