-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – வடமராட்சி, கரவெட்டி, கரணவாய் பகுதியில் தொடர்ச்சியாக இலங்கை தொலைத்தொடர்பு சேவைக்குரிய (srilanka Telecom) வயர்கள் திருடர்களால் அறுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 8 முறைப்பாடுகள் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இதுவரை எவரையும் நெல்லியடி பொலிஸார் கைது செய்யவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
திருடர்களால், அரச சொத்தான சிறிலங்கா டெலிகொம் இணைப்பு கேபிள்கள் அறுக்கப்படுவதனால் தொலைத்தொடர்பு பாதிக்கப்படுவதாகவும், அரச சொத்துக்கள் நாசமாக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை ஏதும் எடுக்கப்படுவதில்லை என்றும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்