ஹம்பாந்தோட்டை – மீகஹஜதுரவில் போக்குவரத்து சோதனையின் போது நிறுத்தத் தவறிய லொறி மீது சூரியவெவ பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
லுணுகம்வெஹரவிலிருந்து சூரியவெவ நோக்கி பயணித்த லொறியானதுஇ பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த நிலையில் வாகனத்தின் டயர் மீது பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ணப்பட்டுள்ளது.
இதன்போது, லொறி சோதனையிடப்பட்ட நிலையில் 17 மாடுகளை ஏற்றிச் சென்றமை தெரியவந்துள்ளது.
இதற்கமைய, சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.