இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்த நிலையில் 177 எனும் வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.2 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து போட்டியின் வெற்றியிலக்கை அடைந்தது.
ரோயல் செலஞ்சர்ஸ் சார்பில் விராட் கோலி அதிகபட்சமாக 77 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், போட்டியின் சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்