-மன்னார் நிருபர்-
ராமேஸ்வரம் மண்டபம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை மீன் பிடிக்க கடலுக்கு சென்று தலைமன்னார், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஐந்து விசைப் படகையும், 27 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் பாம்பன் சாலை பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோபு அவர்கள் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது.
இதில் பாம்பன் சாலை பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்ததை வாபஸ் பெறுவதாகவும், ஆனால் நாளை ராமேஸ்வரத்தில் உள்ள தபால் நிலையத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்