ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் புறநகர் பகுதியில் நேற்று ஆயுததாரிகள் சிலரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக அதிகரித்துள்ளதுடன், 115 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் 5 சிறுவர்கள் உட்பட 60 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன