ஹட்டன் ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று திங்கட்கிழமை அதிகாலை ரயில் மோதுண்டு நபரொருவர் பலியாகியுள்ளார்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த இரவு நேர அஞ்சல் ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்