பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பயணிகள் மற்றும் சரக்கு ரயில் இன்று பகல் 12.30 மணியளவில் தடம் புரண்டுள்ளது.
பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த பயணிகள் மற்றும் சரக்கு ரயில் தடம் புரண்டதால் மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பதுளை ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
எல்ல மற்றும் தெமோதர புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பகுதியிலேயே ரயில் தடம் புரண்டுள்ளது.
ரயில் தடம் புரண்டதன் காரணமாக புகையிரத தண்டவாளம் பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும், தற்போது சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.