மன்னார் – உயிலங்குளம் பொலிஸ் பிரிவின் சிறுநாவற்குளம் பகுதியில் நேற்று சனிக்கிழமை ரயிலில் இருந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிர் இழந்தவர் தனது குடும்ப உறுப்பினர்களை தலைமன்னாரிலிருந்து கொழும்பு செல்லும் ரயிலில் சிறுநாவற்குளம் ரயில் நிலையத்தில் ஏற்றிவிட்டு ரயில் பயணிக்கும் போது அதிலிருந்து இறங்க முயன்றுள்ளார்.
இதன்போது ரயிலில் இருந்து விழுந்த குறித்த நபர் பலத்த காயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து உயிலங்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.