-பதுளை நிருபர்-
ரயிலில் பயணித்த வெளிநாட்டு இளைஞன் ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொஹமடி நசாப் நிமா (வயது – 29) என்ற ஈரான் பிரஜை ஒருவரே காயமடைந்துள்ளார்.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த பொடி மெனிகே ரயிலில் பயணித்த குறித்த இளைஞன் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் ஒஹியா புகையிரத நிலையத்தில் வைத்தே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
காயமடைந்த வெளிநாட்டவர் அதே ரயிலில் ஹப்புத்தளை ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அம்புலன்ஸ் மூலம் தியத்தலாவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தின் காரணமாக அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
