உள்ஹிட்டிய ரத்கித நீர்த்தேக்கத்தின் ஆறு வான்கதவுகள் இன்று திங்கட்கிழமை காலை திறக்கப்பட்டதாக உள்ஹிட்டிய ரத்கித நீர்த்தேக்கத்தின் அதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார்.
உல்ஹிட்டிய ரத்கித நீர்த்தேக்கத்தின் அவசர பராமரிப்புக்காக நீர்த்தேக்கத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிதுள்ள அவர், மக்களை அவதானமாக இருக்குமாறு குறிப்பிட்டுள்ளார்.
கிராதுருகோட்டையிலிருந்து ரத்கித வீதியூடான போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என உல்ஹிட்டிய ரத்கித நீர்த்தேக்கத்தின் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.