அக்குரஸ்ஸவில் உள்ள ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் அலுவலகம் நேற்று சனிக்கிழமை இரவு சேதப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் அக்குரஸ்ஸ அமைப்பாளருமான டினூக் கொலம்பகே இதனை தெரிவித்துள்ளார்.
“எமது எதிரிகள் கொள்கைகளின் அடிப்படையில் இந்த தேர்தலில் எம்மை தோற்கடிக்க முயற்சித்தார்கள், அது தோல்வியடைந்துள்ளது. பொதுமக்கள் அவர்களின் வாக்குறுதிகளை நிராகரித்துள்ளனர். அவர்கள் தற்போது எம்மையும் எமது ஆதரவாளர்களையும் அச்சுறுத்த முயற்சிக்கின்றனர். அதுவும் தோல்வியடையும்” என கொலம்பகே மேலும் தெரிவித்தார்.