-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் முற்றவெளி திறந்தவெளி அரங்கில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் தென்னிந்திய பிரபல பாடகர் ஹரிஸ், சூப்பர் சிங்கர் புகழ் ரம்யா, ரேஷ்மா, சௌந்தர்யா, செந்தில்தாஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் குறித்த நிகழ்வில் குழப்பம் விளைவித்ததாக தெரிவித்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்