-யாழ் நிருபர்-
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்று செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டமைப்பின் 11.03.2024 மற்றும் 18.03.2024 திகதியிடப்பட்ட பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்ட கடிதங்களின் பிரகாரம் 19.03.2024 முழுநாளும் அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் பல்கலைக்கழக கல்விசாரா பணியாளர்களின் சம்பள முரண்பாடு, சம்பள அதிகரிப்பு மற்றும் அவர்களைப் பாதிக்கும் பிரச்சனைகளிற்கு உரிய கால அவகாசங்கள் வழங்கப்பட்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும் அரசாங்கமும் இதுவரை தீர்வினை வழங்காதமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் உடனடித் தீர்வினை வேண்டியும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது என்றும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுப்பது என்றும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதற்கு அமைவாக இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றிருந்தது.
