-யாழ் நிருபர்-
யாழ்.உடுப்பிட்டி தெற்கு பண்டகைப் பிள்ளையார் ஆலய சப்பற வெள்ளோட்ட நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
வெள்ளோட்டத்தை தொடர்ந்து தம்பிப்பிள்ளை சூரியகுமார் குடும்பத்தினரின் நிதி அனுசரணையில் அமைக்கப்பெற்ற சப்பறத்தை வடிவமைத்த இமையாணன் இந்திரன் சிற்பாலய ஸ்தபதி மகேந்திரன் குழுவினரை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
ஆலய பரிபாலனசபை தலைவர் லிங்கம் தலைமையில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வில் ஆலய பிரதம குருவான சிவசிறீ குமாரசிவ சேவற்கொடியோன் குருக்களின் வாழ்த்துரையும் இடம்பெற்றது.
இதேவேளை கடந்த 07.08.2023 திங்கட்கிழமை மதியம் அன்று வே. நாகரத்தினம், வே.தம்பிராசா குடும்பங்களின் நிதி அனுசரணையில் நீர்வேலியை சேர்ந்த ச.ஜெயராஜா ஆசாரியார் குழுவினரால் வடிவமைக்கப்பட்ட மஞ்சம் வெள்ளோட்டமும், அதனைத் தொடர்ந்து ஆச்சாரியர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.





