ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர், தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மூன்று பிரதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் இன்று புதன்கிழமை முற்பகல் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.