-யாழ் நிருபர்-
நடைபெற்று முடிவடைந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில், தேசிய மக்கள் சக்தி சார்பில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும், இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரும், சுயேட்சை குழு 17 சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினருமாக 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், தேசிய மக்கள் சார்பில் கருணநந்தன் இளங்குமரன், சண்முகநாதன் பவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி ராஜீவன் ஆகியோரும், இலங்கை தமிழரசு கட்சி சார்பில் சிவஞானம் ஸ்ரீதரன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , சேட்ச்சை குழு 17 சார்பில் ராமநாதன் அர்ஜுன் ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.