-யாழ் நிருபர்-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திலிருந்து பிரச்சார பணிகளை நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்துள்ளனர்.
தியாக தீபத்தின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, சுடரேற்றி வணக்கம் செலுத்திய பின்னர், பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஸ் உட்பட கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இந்த பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


