-யாழ் நிருபர்-
யாழில் நேற்று மாலை கடற்றொழிலுக்கு சென்றவர் படகினுள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது அராலி மத்தி, வட்டுக்கோட்டையைச் பேரானந்த சிதம்பரம் நாகராஜா (வயது – 53) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த நபர் நேற்று மாலை 5.30 மணியளவில் அராலியில் இருந்து தனியாக கடற்றொழிலுக்கு சென்றுள்ளார். இவ்வாறு சென்றவர் இன்று காலைவரை திரும்பி வரவில்லை.
இந்நிலையில் கிராமவாசிகள் மேற்கொண்ட தேடுதலில் அவரது சடலமானது இன்று திங்கட்கிழமை காலை பொன்னாலை கடலில் படகுடன் கரையொதுங்கி இருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சடலத்தின் வாயில் காயம் காணப்படுவதுடன் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.