அநுர குமார திஸாநாயக்க கடந்து வந்த பாதை!!
💫முழு பெயர் – திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க.
💫பிறப்பு – 1968.11.24.
💫பிறந்த ஊர் – கலேவெல – நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார்.
💫ஆரம்ப கல்வி – தம்புத்தேகம காமினி வித்தியாலயம்.
💫உயர் கல்வி – தம்புத்தேகம மத்திய கல்லூரி.
குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து – பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் இவராவார்.
1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவர் 1995 இல் பட்டதாரியானார்.
அரசியல் வாழ்க்கை!
💫1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.
💫1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1998 இல் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார்.
💫1998 இல் மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டார்.
💫2000 இல் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.
💫2004 இல் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக விருப்பு வாக்குகளுடன் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார். கூட்டணி அரசாங்கத்தில் விவசாய அமைச்சர் பதவியையும் வகித்தார்.
💫2008 இல் ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.
💫2010 இல் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு….
💫2014 ஜனவரி 2 ஆம் திகதி ஜே.வி.பியின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
அவர் பதவியேற்ற பின்னர் மாகாணசபைத் தேர்தலில் ஜே.வி.பியின் வாக்கு வங்கி அதிகரித்தது.
💫2015 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எதிர்க்கட்சி பிரதம கொறடாவாகவும் செயற்பட்டார்.
💫2019 ஆகஸ்ட் 18 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடப்பட்டார்.
💫ஜனாதிபதி தேர்தலும் ஜே.வி.பியும் 1982ஆம் ஆண்டு நடந்த முதலாவது ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் அதன் நிறுவுநரான றோகண விஜேவீர போட்டியிட்டு, 273,428 வாக்குகளைப் பெற்றிருந்தார்.
💫அதன் பின்னர்,1999 ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி சார்பில் நந்தன குணதிலக போட்டியிட்டு, 344,173 வாக்குகளைப் பெற்றிருந்தார். ( தற்போது ஐக்கிய தேசியக்கட்சியில் அங்கம் வகிக்கின்றார்.
💫2010 இல் பொது வேட்பாளராக களமிறங்கிய பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது.
💫2015 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை. எனினும், மஹிந்த ராஜபக்சவுக்கு வாக்களிக்ககூடாது என பிரசாரம் முன்னெடுத்தது.