மொனரகலை வெல்லவாய தெல்லுல்ல பகுதியில் யானையொன்றை கொன்று, அதன் தலை, தும்பிக்கையை வெட்டி, கிரிந்திஓய ஆற்றில் வீசப்பட்டுள்ளமை தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
யானையின் உடலை துண்டு துண்டாக வெட்டி, கிரிந்திஓய ஆற்றில் வீசியுள்ளதுடன், யானையின் தலை மாத்திரம் கரையொதுங்கியுள்ளதாகவும் இது தொடர்பிலான முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

