-மூதூர் நிருபர்-
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள தோப்பூர் பகுதியில் வீடொன்றில் இருந்த இன்று செவ்வாய் கிழமை திருடர்கள் மோட்டார் சைக்கிளின் உதிரிபாகங்களை திருடி விட்டு மோட்டார் சைக்கிளை கை விட்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.
இதேவேளை மோட்டார் சைக்கிள் உரிமையாளரினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்