காலி – கொழும்பு வீதியில் மோட்டார் சைக்கிளும் அம்பியூலன்ஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இளைஞன் ஒருவன் இன்று வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.
காலி – கொழும்பு வீதியில் தருன சேவா மாவத்தை அருகே, காலியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பலபிட்டிய வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வாகனம் எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்